மேசை பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ..!

Sunday, March 5th, 2017

ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது. மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ பயிற்சியாளரை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு புதியவர்களுடன் மெதுவாகவும், அனுபவமுடைய வீரர்களுடன் வேகமாகவும் விளையாடுகிறது குறித்த ரோபோ.

குறித்த பயிற்சியளிக்கு ரோபோ தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு உக்திகளைச் பயிற்றுவிப்பதோடு, எதிரில் விளையாடுபவரை மிகச் சிறந்த விளையாட்டு வீரராக மாற்றுகிறது.

மேலும் மனிதர்களைப்போல ரோபோ பயிற்சியாளர் சோர்வோ, கோபமோ படுவதில்லை. இதனால் எதிரில் பயிற்சி பெறுபவர்களுக்கு புத்துணர்வு தரும் வகையில் ரோபோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயிற்சி பெறுபவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அபாரம், அற்புதமான பந்து வீச்சு என வசனங்கள் உற்சாகம் அளித்தும் வருகிறது. அத்தோடு வீரர்கள் தவறாக விளையாடும்போது, தவறு என்ன என்பதையும் அதை எப்படிச் சரி செய்ய வேண்டுமென்பதையும், சொல்லிக்கொடுக்கும் வல்லமையுடைய ரோபோவிற்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.

Related posts: