முரளிதரனுடன் இணைந்துகொண்ட வங்கத்து வீரர்!

Tuesday, August 29th, 2017

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை சாஹிப் அல்ஹசன் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் விளையாடி வரும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வங்கதேசம் 260 ஓட்டங்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய அவுஸ்திரேலிய அணி சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஹசன் மிராஸ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 217 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

சாஹிப் அல்ஹசன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தனார்.ரென்ஷா (45), லயன் (0), மேக்ஸ்வெல் (23), கம்மின்ஸ் (25), ஹசில்வுட் (5) ஆகியோரை வெளியேற்றிதன் மூலம் பந்து வீச்சு ஜாம்பவான்களுடன் சாதனையை பகிர்ந்துள்ளார் சாஹிப் அல் ஹசன்.அவுஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Related posts: