மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

Thursday, May 17th, 2018

11வது இந்தியனர் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் 50வது போட்டி நேற்று இடம்பெற்றது.மும்பை இன்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அகிய அணிகள் மோதிய இந்த போட்டியில் மும்பை அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய, மும்பை இன்டியன்ஸ் அணி துடுப்பாடியது.

அதன்படி மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 186 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கட்டுக்களை இழந்த 183 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது.

ஆரம்ப போட்டிகளில் தொடர் தோல்வியினை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காம் இடம் வரை முன்னேறியுள்ளது.

அதேவேளை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

பட்டியில் சன்ரைசஸ் ஹதராபாத் அணி தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளதுன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இரண்டாது இடத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா அணி காணப்படுகின்றது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 5வது இடத்திலும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 7வது இடத்திலும் இறுதி இடத்தில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணியும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கும் சன்ரைசஸ் ஹதராபாத் அணிக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Related posts: