மும்பை அசத்தல் வெற்றி!

Thursday, April 13th, 2017

ஐபிஎல் டி20 சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் பத்தாவது சீசனில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி ஹதராபாத் அணியை எதிர்கொண்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் 49 ஓட்டங்களும், தவான் 48 ஓட்டங்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

எனினும், அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறவே 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்த ஐதராபாத் அணி 158 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனை தொடர்ந்து 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் முண்ணனி வீரர்களான ரோஹித் சர்மா ஓட்டங்களிலும், பொலார்டு 11 ஓட்டங்களிலும், பட்லர் 14 ஓட்டங்களிலும் வெளியேறி ஏமாற்றினர்.

இளம் வீரர்களான பார்தீவ் பட்டேல் 39 ஓட்டங்களும், ராணா 45 ஓட்டங்களும், க்ரூணல் பாண்டியா 37 ஓட்டங்களும் எடுத்து கைகொடுக்க 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்த மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.

Related posts: