முத்தரப்பு கிரிக்கெட்: முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வெற்றி!

Wednesday, January 17th, 2018

இலங்கை பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி டாக்காவில் ஆரம்பமாகியது.

இதில் சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்காடிய பங்களாதேஷ் 171 எனும் இலக்கை நோக்கி 28 ஓவர்களில் 3 பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு மிக இலகுவாக வெற்றியை தன்வசப்படுத்தியது. போட்டியின் ஆட்டநாயகனாக ஷாகிப் அல் ஹசன் தெரிவானார்.

Related posts: