முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Saturday, December 31st, 2016

போர்ட் எலிசெபத் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 286 ஓட்டங்களும், இலங்கை அணி 205 ஓட்டங்களும் எடுத்தன.இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 406 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 488 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 240 ஓட்டங்கள் எடுத்திருந்தது.அணித்தலைவர் மேத்யூஸ் 58 ஓட்டங்களுடனும், தனன்ஜெய டி சில்வா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி ஒரு நாள் ஆட்டம் மீதமிருந்த நிலையில் இலங்கை வெற்றிக்கு 248 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதே சமயம் தென்ஆப்ரிக்கா வெற்றிப்பெற 5 விக்கெட் தேவை என்ற நிலை இருந்தது.இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் 59 ஓட்டங்களுடனும், தனன்ஜெய டி சில்வா 22 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

அடுத்து வந்தவர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில், ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், அபார்ட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: