மீண்டும் ரன்கள் குவிப்பேன் – டேவிட் வோர்ணர்!
Thursday, March 23rd, 2017ரன்கள் சேகரிப்பதில் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தான் ரன்கள் குவிக்கும் வகையிலான சூழ்நிலை மீண்டும் வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்துள்ள வார்னர், இதுவரையிலான 3 டெஸ்ட் போட்டிகளிலுமாக, 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.இந்நிலையில், ரன் சேகரிப்பில் தனது தடுமாற்றம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்த வரையில், இதைவிடச் சிறப்பாக பேட்டிங் செய்ய இயலாது என்று கருதுகிறேன். எனது பேட்டிங் முறையில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சரியான தருணத்தில் ரன்கள் எனக்கு கிடைப்பதில்லை. எனக்கான சரியான சூழ்நிலை மீண்டும் வரும். அப்போது நான் முன்புபோல ரன்கள் குவிப்பேன். அதுவரையில், நான் வழக்கம்போலவே போட்டிகளுக்கு என்னை தயார்படுத்திக்கொள்வேன். இத்தகைய கடுமையான சூழ்நிலைகளை நான் மட்டுமே சந்திக்கவில்லை. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று டேவிட் வார்னர் கூறினார்.
Related posts:
|
|