மீண்டும் மத்தியூஸ் களத்தில்!

Tuesday, March 21st, 2017

கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடவுள்ளதாக கிரிக்கெட் தேர்வுக் குழுவின் செயலாளர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதே சனத் ஜெயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும், உபாதையானது இன்னும் மூன்று வாரங்களில் குணமாகலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக ஏஞ்சலோ மேத்யூஸ் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: