மீண்டும் பட்டையை கிளப்ப போகும் சனத் ஜெயசூரியா!

Saturday, November 12th, 2016

இந்தியன் சாம்பியன் லீக் என்ற புதிய டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட உள்ளது.இந்த தொடரில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் என்று இந்த தொடரை நடத்தும் Magpie Sports Group (MSG) தெரிவித்துள்ளது.

இதில் டெல்லி பாட்ஷா, இந்தூர் ராக்கெட்டுகள், மும்பை ஸ்டார், சென்னை வாரியர்ஸ், ஹைதராபாத் ரைடர்ஸ், பெங்களூர் டைகர்ஸ், லக்னோ சூப்பர் ஸ்டார் மற்றும் சண்டிகர் ஹீரோஸ் என எட்டு அணிகள் பங்கேற்க உள்ளது.

இதில் ஹசான் திலகரத்ன, பிரமொட்யா, சனத் ஜெயசூரியா, சமிந்த வாஸ், உபுல் சந்தன, டில்ஹர லொக்குஹெடிகி, மொஹரூஃப், டில்ஹர பெர்னாண்டோ உள்ளிட்ட இலங்கை வீரர்களுடன் பல சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

sanath-jeyasurya

Related posts: