மீண்டும் தலைமைத்துவத்தில் மாற்றம் !

Saturday, January 6th, 2018

இலங்கை கிரிக்கெட் சபை, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான நீண்டகால தலைவர் ஒருவரை நியமிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவரை கிரிக்கெட் சபை அறிவிக்கவுள்ளது.

பெரும்பாலும் இலங்கை அணியின் தலைவராக, தற்போதைய டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதேவேளை எஞ்சலோ மெத்தியூஸை மீண்டும் தலைவராக தெரிவுசெய்வதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசனை செய்துள்ளது.

எனினும் மெத்தயூஸுக்கு ஏற்பட்டுவரும் தொடர் உபாதைகள் அவரின் தலைமைத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற நோக்கிலும் சிந்திக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை அணியின் புதிய தலைவரை தெரிவுசெய்வது தொடர்பில் நேற்று இலங்கை கிரிக்கெட் சபையில் சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால, உபத் தலைவர் கெ. மதிவானன், தலைமை அதிகாரி அஷ்லி டி சில்வா, தெரிவுக்குழு தலைவர் கிராம் லெப்ரோய், கிரிக்கெட் முகாமையாளர் அசாங்க குருசிங்க மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க ஆகியோர் கலந்துக்கொண்டதாக கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ச்சியாக உபாதை காராணமாக அவதிப்படும் மத்தியூஸை நியமிப்பதா? மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக தன்னை அடையாளப்படுத்தி வரும் சந்திமாலை அணித்தலைமைக்கு நியமிப்பதா எனும் கருத்து இரசிகர்கள் மத்தியில் வலுவாக பேசப்படுகின்றது.

00

Related posts: