மீண்டும் சேதப்படுத்தப்பட்ட மெஸ்சியின் வெண்கல உருவச்சிலை!

Friday, December 8th, 2017

கால்பந்து உலகில் ஜாம்பவனாக விளங்கிவரும் ஆர்ஜென்டீனா வீரர் மெஸ்சியின் வெண்கல உருவச்சிலை இரண்டாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டீனா அணித்தலைவர் மெஸ்சி. பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகின்றார். இந்த தலைமுறையில் தலை சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தனது சிறு வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடி வருகிறார்.

புhர்சிலோனா அணிக்காக பல விருதுகளை வாங்கிக் கொடுத்த மெஸ்சி, ஆர்ஜென்டீனா அணிக்காக பெரியளவில் சாதித்தது கிடையாது. 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா ஜேர்மனியிடம் தோல்வியடைந்தது.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது.

பார்சிலோனா அணிக்காக சிறப்பாக விளையாடும் மெஸ்சி, தனது சொந்த நாட்டிற்காக சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவருக்கு ஆர்ஜென்டீனாவில் உள்ள பாசியோ டி லா குளோரியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெண்கல உருவச்சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில் இவர் மீது கோபம் கொண்ட ரசிகர்கள் கடந்த ஜனவரி மாதம், மெஸ்சியின் சிலையை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் அந்தச் சிலை சீரமைப்பு செய்யப்பட்டு நிறுவப்பட்டது. இந் நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் மெஸ்சியின் சிலையின் கையை உடைத்துச் சேதப்படுத்தினர்.

ஒரு வருடத்தில் மெஸ்சியின் சிலை இரண்டு முறை சேதப்படுத்தப்பட்டு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து ஆண்டு ரஸ்ஜாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெறுமா? என்ற நிலை இருந்தது. ஆனால், கடைசிப் போட்டியில் ஹட்ரிக் கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி தகுதி பெற மெஸ்சி முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: