மாலிங்க சாதனை!

Friday, September 1st, 2017

இலங்கை மற்றும் இந்தியா அணிக்கிடையில் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க தனது 300 விக்கட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

29வது ஓவரின் 3வது பந்தில் லசித் மாலிங்க வீசிய பந்தில் விராட் கோஹ்லி ஆட்டமிழந்து வௌியேறினார்.இதன் மூலம் , ஒருநாள் சர்வதேச போட்டிகளில் லசித் மாலிங்க 300 விக்கட்டை பதிவு செய்துள்ளார்.

மேலும், 300 விக்கட்டுக்களை வீழ்த்திய 4வது இலங்கை வீரராக லசித் மாலிங்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நாயண சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி சற்று முன்னர் வரை 2 விக்கட் இழப்பிற்கு 236 ஓட்டங்களை பெற்றுள்ளது.இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 131 ஓட்டகளை பெற்றக்கொண்டார்.ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிவருகிறார்.

Related posts: