மலேசியாவை பந்தாடிய இலங்கை!

Saturday, December 17th, 2016
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியுள்ளது.

இதில் கொழும்புவிற்கு அருகில் உள்ள மொரட்டுவ என்ற இடத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை- மலேசியா அணிகள் மோதியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மலேசிய அணி இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.2 ஓவரிலே 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.அந்த அணியின் அய்னூல் ஹக்கீம் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பில், கமிந்து மெண்டிஸ், அசன் பண்ட்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.இதைத் தொடர்ந்து 105 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 18 ஓவரிலே 2 விக்கெட் மட்டும் இழந்து 108 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் விஷ்வா சதுரங்கா 68 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

1100

Related posts: