மத்தி – சென். ஜோன்ஸ் ஒருநாள் ஆட்டம் இன்று!

Saturday, March 17th, 2018

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான ஒருநாள் துடுப்பாட்டம் நாளை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இதுவரை 16 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 8 ஆட்டங்களில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் 7 ஆட்டங்களில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் வெற்றிபெற்றன. ஓர் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வடக்கின் போர் துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றிபெற்றது. இதனால் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு உள்ளது. சென். ஜோன்ஸின் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகம்.

Related posts: