பெரும் பின்னடைவை ஏற்படுத்திய  தரங்கவின் தடை!

Saturday, August 26th, 2017

இலங்கை இந்திய அணிகள் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றுவரும் நிலையில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்த நிலையில் அப்போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக அந்த அணியின் ஒரு நாள் அணித் தலைவரான உபுல் தரங்காவிற்கு இத் தடை விதிக்கப்பட்டுள்ளது

உபுல் தரங்காவிற்கு பதிலாக சமர கபுகேதரா இலங்கை அணியை வழிநடத்துவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.உபுல் தரங்காவிற்கு விதிக்கப்பட்ட தடை இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில், கடந்த போட்டியின் போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான தனுஷ்க குணதிலகா தோள்பட்டையில் காயம் அடைந்தார்.அவருக்கு 10 நாள் ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் அவரும் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியுடன் தோல்வி அடைந்துள்ள நிலையில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இவர்களுக்கு பதிலாக டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சண்டிமால் மற்றும் லஹிரு கபுகேதரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related posts: