புதிய மைல்கல்லை எட்டிய ஜாம்பவான்கள்!

Tuesday, February 28th, 2017

உலகின் தலைசிறந்த வீரர்களாக திகழும் மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் கால்பந்தில் புதிய மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளனர்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக 400வது வெற்றியை பெற்றுக்கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில், லா லிகா கால்பந்து தொடருக்கான லீக் போட்டி நடந்தது. இதில் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் மெஸ்ஸி இடம் பெற்ற பார்சிலோனா அணி 400வது வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2003ல் பார்சிலோனா அணிக்காக அறிமுகமான இவர், இதுவரை 566 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் பார்சிலோனா அணி 400 வெற்றி, 102 டிரா, 64 தோல்வியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே சமயம், வில்லாரியல் நகரில் நடந்த மற்றொரு போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை தோற்கடித்தது.

இப்போட்டியில் பெனால்டி வாய்ப்பில் கோலடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, லா லிகா தொடரில் பெனால்டி வாய்ப்பில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதுவரை இவர், 57 பெனால்டி கோல் அடித்துள்ளார். முன்னதாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய மெக்சிகோ வீரர் ஹுகோ சான்சஸ், 56 பெனால்டி கோல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

lionel_messi_vs_cristiano_ronaldo_mini

Related posts: