பிரபல விளையாட்டுகளில் ஒன்றாக தடகளம்: ஐ.ஏ.ஏ.எஃப். நம்பிக்கை!

Sunday, December 25th, 2016

தடகள போட்டியானது நடப்பு ஊக்கமருந்து பிரச்னைகளில் இருந்து மீண்டு உலகின் முதல் நான்கு விளையாட்டுகளில் ஒன்றாக உருவெடுக்கும் என்று சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் செபாஸ்டியன் கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தடகளப் போட்டிகள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக உலகின் முதல் 4 விளையாட்டுகளுக்குள் இடம் பிடிப்பதே எங்கள் இலக்கு. ஒலிம்பிக் போட்டியின் முதல் 4 விளையாட்டுகளில் இடம் பிடிப்பதல்ல. அந்த வகையில் கால்பந்து டென்னிஸ் ஃபார்முலா ஓன் விளையாட்டுகள் தான் எங்களுக்கான போட்டிகளே தவிர நீச்சலோ ஜிம்னாஸ்டிக் போட்டியோ அல்ல.

தடகள போட்டிக்கு இந்த ஆண்டானது மிக முக்கியமான அதே சமயத்தில் கடினமான ஒன்றாக அமைந்தது. 4 உலக சாம்பியன்கள் உருவெடுத்ததன் மூலம் ஒலிம்பிக்கில் நம்பர் 1 விளையாட்டு என்ற மதிப்பை மீட்டெடுத்துள்ளோம்.

எனினும் ரஷிய ஊக்கமருந்து விவகாரமானது அதையும் தாண்டிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதைக் கடந்து தடகள விளையாட்டின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்.

ஐஏஏஎஃப் அமைப்பை பொறுப்புமிக்க வலுவான நம்பகத்துக்கு உகந்த ஒன்றாக நிர்வகிக்க விரும்புகிறோம். அதன் காரணமாகவே ரஷிய தடகள சம்மேளனத்தை இடைநீக்கம் செய்யும் முடிவை மேற்கொண்டோம். அதவேளையில் ரஷியாவுடன் தொடர்ந்து பணிபுரியத் தயாராக இருக்கிறோம். ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து அந்நாட்டு விளையாட்டு அமைப்பு மீண்டு வரும் நிலையில் அந்த நடவடிக்கைகள் தொடங்கும் என்று செபாஸ்டியன் கோ கூறினார்.

SEBASTIAN

Related posts: