பிடியெடுப்பைத் தவறவிட்டதால் வெற்றியையும் தவறவிட்டோம் – புஜாரா!

Saturday, December 9th, 2017

“இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில், பிடியெடுப்பைத் தவறவிட்டதாலேயே வெற்றியையும் தவற விட்டோம்” என்று தெரிவித்தார் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் புஜாரா.

ஆட்டத்தின் பின்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே புஜாரா இவ்வாறு தெரிவித்தார்.

“எங்களது களத்தடுப்பு சரியாக அமையவில்லை. பல பிடியெடுப்புக்களைத் தவற விட்டோம். மோசமான களத்தடுப்பால் இந்த டெஸ்;டில் வெற்றியை இழந்தோம். இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். களத்தடுப்பில் நாம் இன்னும் முன்னேற்றமடைய கடுமையாக பயிற்சி பெற வேண்டும். ஒவ்வொரு பிடியெடுப்பும் இன்றியமையாதது” என புஜாரா மேலும் தெரிவித்தார்.

Related posts: