பாரா ஒலிம்பிக்கிலும் ஊக்க மருந்து சர்ச்சை: ஒட்டுமொத்த ரஷ்யா அணிக்கும் தடை!

Monday, August 8th, 2016

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் ஊக்க மருந்து சர்ச்சைகளில் சிக்கியதால் ஒட்டுமொத்த ரஷ்யா அணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 7-ஆம் திகதிமுதல் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளன. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இப்போட்டிகள் நடைபெறும்.

இப் போட்டிகளில் பங்கேற்கும் ரஷ்யாவின் வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர். இதனால் ஒட்டுமொத்த ரஷ்யா அணியும் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச பாரா ஒலிம்பிக் சங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு எதிராக ரஷ்யா மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய ஒலிம்பிக் போட்டிகளிலும் ரஷ்யாவின் வீரர்கள் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினர். இதனால் தடகளப் போட்டிகளில் ரஷ்யா வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: