டோனி தொடர்பில் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கருத்து!

Monday, July 22nd, 2019

உலக கிண்ணம் இரண்டினை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனியின் நிலமை இன்று மிகவும் தர்மசங்கடமான நிலையில் உள்ளது.

இங்கிலாந்தில் நடந்த உலக கிண்ண போட்டியோடு 38 வயதான டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார்.

உலக கிண்ண அரை இறுதியில் இந்திய அணி தோற்றதால் டோனி மீதான விமர்சனமும் அதிகமானது. இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்காதது அவர் மீதான அதிருப்தியை மேலும் அதிகமாக்கியது.

இதற்கிடையே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து டோனி விலகி உள்ளார். அவர் இந்திய ராணுவத்தினருடன் 2 மாத காலம் தங்கி இருப்பார். தன் மீது எழுந்துள்ள சர்ச்சையால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதேநேரத்தில் அவர் ஓய்வு முடிவை தள்ளிவைத்துள்ளார்.

இந்தநிலையில் டோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டோனியிடம் இன்னும் கிரிக்கெட் திறமை இருக்கிறது. இது எனக்கு தெரியும். சர்வதேச போட்டியில் விளையாடக்கூடிய அளவுக்கு அவர் போதுமான உடல் தகுதியுடன் இருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ணம் வரை டோனியால் தொடர்ந்து விளையாட முடியும் என அவர் கூறினார்.

Related posts: