பாண்டியா இருப்பது எங்கள் அதிர்ஷ்டம் – கோஹ்லி!

Tuesday, September 19th, 2017

இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா இருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு சமயம் அதிக விக்கெட்களை இழந்து இந்தியா தவித்த போது களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியா அபாரமாக விளையாடி 66 பந்துகளில் 83 ஓட்டங்களை குவித்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு வழிவகுத்தார்.

இதோடு 2 முக்கிய அவுஸ்திரேலிய விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு பாண்டியா உதவியாக இருந்தார்.போட்டி முடிந்த பின்னர் இது குறித்து பேசிய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, பாண்டியா தன்னை நம்புகிறார். அவரின் அபார ஆட்டம் நேற்றைய போட்டியையே மாற்றி அமைத்துவிட்டது.பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பாண்டியா திறமையானவராக உள்ளார், இந்திய அணியில் அவர் இருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என கோஹ்லி கூறியுள்ளார்

Related posts: