பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மொஹமட் யூசுப் நியமனம்!

Thursday, November 10th, 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரருமான மொஹமட் யூசுப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான தொடருக்கு, பாகிஸ்தான் அணியை தயார்படுத்தும் முனைப்பில் இவரது நியமனம் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த சிம்பாப் வேயின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவருக்கு பதிலாகவே மொஹமட் யூசுப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளிலும், 288 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள மொஹமட் யூசுப்,ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.

89col160427741_4998743_09112016_aff_cmy

Related posts: