பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிளிட்ஸ்கோ!

Monday, August 7th, 2017

குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விளையாட்டின் பின்னரான அடுத்த வாழ்க்கையை தொடர விரும்புவதாக அதிபார உலக சம்பியன் குத்துச் சண்டை வீரரான உக்ரேய்னின் 41 வயதான விளாடிமிர் கிளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், பிரித்தானிய வீரர் அன்ரனி ஜொஸ்வாவுடன் 11ஆம் சுற்றில் தோல்வியை தழுவிய கிளிட்ஸ்கோ, எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி, ஜொஸ்வாவுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது ஓய்வு குறித்து விளாடிமிர் கிளிட்ஸ்கோ கூறுகையில், ‘மீளவும் போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் இல்லை. குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்திருக்கின்றேன்.

தான் கனவு கண்ட அனைத்தையும் அடைந்து விட்டேன் ஆகவே விளையாட்டின் பின்னரான அடுத்த வாழ்க்கையை தொடர விரும்புகிறேன்’ என கூறினார்.

Related posts: