பனிக்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்மார்ட் போன்களுக்குத் தடை!

Friday, February 9th, 2018

பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்ளும் வடகொரிய மற்றும் ஈரானிய வீரர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் வழங்கப்பட மாட்டாது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இம்முறை பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் பிரபலமான கைப்பேசி உற்பத்தி நிறுவனம் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்குதிறன்பேசிகளை வழங்கவுள்ளது.

இந்த திறன்பேசிகள் ஏனைய நாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் என்றாலும் வடகொரியா மற்றும் ஈரானிய வீரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

இந்தத் தீர்மானமானது குறித்த இரு நாடுகளுக்கு திறன்பேசிகளை ஏற்றுமதி செய்வதற்கு ஐ.நா. பொருளாதாரத் தடை விதித்த நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: