பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியானது!

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முதல் 5 பணக்கார வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதன் பிரகாரம் –
Lasith Malinga
இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஆவார்.
லசித் மலிங்காவின் நிகர மதிப்பு மற்றும் ஐபிஎல்லில் அவரது சம்பளம் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து அவரது சொத்து மதிப்பு 8.5 மில்லியன் டொலர் ஆகும்.
2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1 மில்லியன் டொலர் ஆகும்.
Angelo Mathews
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆவார். இவர், Samsung, Hewlett-Packard மற்றும் Ceylon Cold Stores ஆகியவற்றின் தூதுவராக இருந்துள்ளார்.
இவர் சமீபத்தில், Elephant House brand of Ice Creams – யின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்து மதிப்பு 7 மில்லியன் டொலர் ஆகும்.
Rangana Herath
இலங்கை கிரிக்கெட் அணியில் முத்ததையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
விளம்பர தூதுவர், ஒரு போட்டிக்கு விளையாட இவர் வாங்கும் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் இவரது சொத்து மதிப்பு 5.3 மில்லியன் டொலர் ஆகும்.
Dinesh chandimal
இவரின் ஒரு வருட சம்பளம் 600,000 டொலர் ஆகும். மேலும், பல்வேறு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர் விளம்பரங்கள் மூலமாகவும் வருமானம் ஈட்டியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும்.
Ajantha Mendis
பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தியதன் மூலம் இவரது வருவாய் அதிகரித்தது. இவரது சொத்து மதிப்பு 4.2 மில்லியன் டொலர் ஆகும்.
Related posts:
|
|