நோர்வே தொடர்ந்தும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முன்னிலை!

Thursday, February 22nd, 2018

 

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நோர்வே பதக்கம் பெற்ற நாடுகளில் முன்னணியில் உள்ளது.

நோர்வே 11 தங்கம் 9 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்ளைப் பெற்று மொத்தமாக 28 பதக்கங்களுடன் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜேர்மனி 10 தங்கம் 6 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 20 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்திலும்  கனடா 8 தங்கம் 5 வெள்ளி 6வெண்கல பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 19 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்திலும் நெதர்லாந்து 6 தங்கம் 5 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களைப் பெற்றுமொத்தமாக 13 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளன.

மேலும் அமெரிக்கா, 5 தங்கம் 3 வெள்ளி 4 வெண்கல பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 12 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்திலும்  ஆறாம் ஏழாம் இடங்களைபிரான்ஸ் மற்றும் சுவீடன் அணிகளும்  எட்டாம், ஒன்பதாம் மற்றும் 10 ஆம் இடங்களை முறையே ஒஸ்ரியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளும்பிடித்துள்ளன.

Related posts: