நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்!

Thursday, March 15th, 2018

வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கபடியில் 20 வயது பெண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது.

ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நெல்லியடி மத்திய கல்லூரி அணி 51:36 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.

மூன்றாமிடத்தை பருத்தித்துறை சென். தோமஸ் மகளிர் கல்லூரி அணி பெற்றது.

Related posts: