நெதர்லாந்தில் சர்வதேச டெனிஸ் போட்டி ஆரம்பம்!

Wednesday, February 14th, 2018

சர்வதேச டெனிஸ் போட்டி நெதலாந்து ரோட்டர்டாம் நகரில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் அண்மையில் அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்த சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரர் பங்குகொள்ளவுள்ளார்.

முதல் சுற்றில் பெல்ஜியத்தை சேர்ந்த தகுதி நிலை வீரர் ருபென் பிமெல்மன்சை எதிர்கொள்கிறார். தற்போது 2வது இடத்தில் உள்ள 36 வயதான ரொஜர் பெடரர் இந்த தொடரில் அரை இறுதியை எட்டினால் ஸ்பெயினை சேர்ந்த ரபல் நடாலை பின்தள்ளி மீண்டும் முதலிடத்தை அடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிகழ்ந்தால் கூடிய வயதில் முதலாம் இடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.