நுவான் பிரதீப்பின் அவமானகரமானதும், ரோஹித் சர்மாவாவின் போற்றத்தக்க உலக சாதனையும் மேலும் சில மைல்க்கல்லும்!

Thursday, December 14th, 2017

இலங்கை ,இந்திய அணிகளுக்கிடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் ஒரு மோசமான சாதனையைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

 இன்றைய பந்துவீச்சில் மொத்தமாக 106 ஓட்டங்களை வாரி வழங்கினார். இலங்கை சார்பில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர் எனும் மோசமான சாதனை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் வசமிருந்தது.

2006ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் 99 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார், இந்த சாதனையை இன்று நுவான் பிரதீப் முறியடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர் எனும் மோசமான உலக சாதனை ஆஸ்திரேலிய வீரர் மிக் லூயிஸ் வசமுள்ளது,

2006 இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 113 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இவருக்கு அடுத்தநிலையில் வஹாப் ரியாஸ் 110 ஓட்டங்களையும், நுவான் பிரதீப், புவனேஷ்வர் குமார் ஆகியோர் 106 ஓட்டங்களையும் விட்டுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகவும் மோசமான சாதனையாக இந்த சாதனை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ,மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய 2 வது ஒருநாள் போட்டியில் முன்னாள் அணித்தலவரான மத்தியூஸ், மற்றும் டிக்வெல்ல ஆகியோர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்கள். இன்றைய போட்டியில் 63 ஓட்டங்களை பெற்ற வேளையில் மத்தியூஸ் 5000 ஒருநாள் ஓட்டங்கள் எனும் மைல்கல்லை எட்டினார்,194 வது போட்டியில், 164 வது இன்னிங்ஸில் இந்த சாதனையை மத்தியூஸ் படைத்தார். அதிகமான இனிங்ஸில் இந்த ஒட்டன் எண்ணிக்கையை மத்தியூஸ் கட்ந்திருந்தார்.

தனது 31 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய டிக்வெல்ல ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார். கடந்த பாக்கிஸ்தான் உடனான தொடரில் 1000 ஓட்டங்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தற்காலிக தலைவரான ரோஹித் சர்மா தனது மூன்றாவது இரட்டைச்சதத்தின் மூலமாக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 7 இரட்டைச் சதங்களே பெறப்பட்டன, அதில் தனி மனிதனாக ரோஹித் சர்மா 3 இரட்டைச் சதங்களை தன் வசம் கொண்டுள்ளார். இதன் முன்னர் சச்சின், கெயில், கப்டில், சேவாக் ஆகியோர் தலா 1 இரட்டைச்சதங்களை பெற்றவர்களாக காணப்படுகின்றார்கள். தனது முதலாவது இரட்டைச் சதத்தை பங்களூரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 2013ல், 209 ஓட்டங்களையும், 2014ல் 264 ஓட்டங்களை கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராகவும், இன்றைய தினம் தனது மூன்றாவது இரட்டைச்சத்தையும் பெற்றுள்ளார். ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார், சச்சின் 40 சிக்ஸ்ர்கள் என்ற சாதனையை முறியடித்து 41 சிக்ஸர்களை அடித்துள்ளார்

Related posts: