நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி.

Wednesday, May 31st, 2017

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கையை எதிர் கொண்ட நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 110 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் நிறைவில், 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 359 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது..நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மார்டின் கப்டில் 116 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்

Related posts: