நவநாகரீகம் வேண்டாம் – இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கோரிக்கை!

Saturday, February 4th, 2017

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தலைமுடியில் வர்ணம் பூசுவது, காதணிகளை அணிவது போன்ற நவநாகரீகங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தீர்மானத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு தெரியப்படுத்துமாறு கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதானி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் ஒரு வேக பந்து வீச்சாளர் தலைமுடியில் வர்ணம் பூசியுள்ளதை மாற்றிக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது உத்தரவு அல்ல எனவும் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறையான பின்னணியை மேம்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

06-sri-lankan-cricket-600

Related posts: