தொடர்ந்து விளையாடுவார் மெஸ்ஸி!

Friday, July 1st, 2016
சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மெஸ்ஸி, விரைவில் புத்துணர்ச்சியுடன் பார்சிலோனா அணிக்கு திரும்ப வேண்டும் என அந்த கிளப்பின் தலைவர் Josep MariaBartomeu வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பார்சிலோனாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ஓய்வு குறித்து மெஸ்ஸி அறிவித்துள்ளது அவருடைய தனிப்பட்ட விஷயம், அவர் முடிவை மாற்ற வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர், இது பொதுவானதே ஏனெனில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அர்ஜென்டீனா அணிக்கு இது மிகப்பெரிய இழப்பு, மெஸ்ஸி அனைத்து விதமான கால்பந்து விளையாட்டிற்கும் சொந்தகாரர். அவர் புது சிந்தனையுடன் விரைவில் எங்கள் அணிக்கு திரும்ப வேண்டும்.

அவர் பார்சிலோனா கிளப் அணியில் தொடர்ந்து விளையாடுவார், பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், மேலும் மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை நீண்ட காலம் நீட்டிக்க முடிவு செய்துள்ளளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கோபா கிண்ணத்தை வென்ற சிலி அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts: