தொடரை வெற்றது இந்தியா!

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று புனே மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி இலங்கை அணி, முதலில் இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பாக கே.எல்.ராகுல் 54 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மனிஷ் பாண்டி ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் சந்தகென் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 202 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களையும் எஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுகொடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் சாய்னி 3 விக்கெட்டுக்களையும் தாகூர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஷார்துல் தாகூர் தெரிவானதோடு தொடரின் நாயகனாக நவ்தீப் சாய்னி தெரிவானார். அதன்படி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியு்ளளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|