தொடரைக்கைப்பெற்றிய அயர்லாந்து அணி

மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் போட்டி அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்றைய தினத்தில் முடிவிற்கு வந்துள்ளது, கடந்த ஜீலை மாதம் இவ்விரு அணிகளுக்கும் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டபின்னர் இரு அணிகளும் சந்திக்கும் முதலாவது தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது, முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதிலும் மீதமான இரு போட்டிகளையும் அயர்லாந்து அணி கைப்பற்றி தொடரை தம்வசம் கொண்டுவந்துள்ளது.
நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது, இதனடிப்படியில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கட்டுக்களை இழந்தது,48.2 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களை மட்டுமே பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது, ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரஹ்மத் ஷா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர், 5 வீரர்கள் ஒற்றை ஓட்டங்களோடு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. டொக்றில் 4 விக்கட்டுகளையும், மெக்கார்த்தி 3 விக்கட்டுகளையும் கைப்பெற்றினாகள்.
178 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பாடிய அயர்லாந்து அணி, 38 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது, அய்ர்லாந்து சார்பாக பால் ஸ்டிர்லிங் 101 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பந்துவீச்சில் மொகமட் நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் பால் ஸ்டிர்லிங் தெரிவு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற அடிப்படையில் அயர்லாந்து அணி கைப்பற்றியது.
Related posts:
|
|