தேர்வாளர் பதவியை நீடிக்கவிரும்பவில்லை – மார்க் வோ!

Steve_Waugh_1438041c Tuesday, May 15th, 2018

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணித் தேர்வாளர் பதவியை நீடிக்கவிரும்பவில்லை என்று, மார்க் வோ தெரிவித்துள்ளார்.

52 வயதான மார்க் வோ, கடந்த 2014ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணித் தேர்வாளராக உள்ளார்.

அவரது உடன்படிக்கை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது.அதன்பின்னர் தமது உடன்படிக்கையை நீடிக்கப் போவதில்லை என்று மார்க் வோ குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் தொலைக்காட்சி வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.