தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி 18 வயதுப் பிரிவில் சம்பியன்!
Friday, March 16th, 2018வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதிற்கு உட்பட்ட பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.
நேற்று மல்லாகம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி மோதியது.
1 ஆவது செற்றில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 25:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதும் 2 ஆவது செற்றில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர்.
3 ஆவது செற்றில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்திய போதும் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 25:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2:1 என்ற செற் கணக்கில் தொடரை கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
Related posts:
|
|