தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இலங்கை மகளிர் அணி!

Thursday, April 18th, 2024

தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

இப்போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்திருந்தது

இன்னிலையில் பதிலுக்கு களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி 44 ஓவர்கள் 3 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் இலங்கை சார்பாக இலங்கை அணி தலைவி சாமரி ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் உட்பட 195 ரன்கள் எடுத்திருந்தார்

இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஒட்டம் இதுவாகும் என்பதுடன் அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக் கொண்டார்.

000

Related posts: