துறையூர் ஐயனார், இருதயராசா சுப்பர் சுற்றுக்கு நுழைந்தது!

Sunday, October 29th, 2017

மைலோ கிண்ண கால்பந்தாட்டத்தில் தீலக லீக்கிலிருந்து வேலணை துறையூர் ஐயனார் மற்றும் மெலிஞ்சிமுனை இருதயராசா ஆகிய அணிகள் சுப்பர் ௲ 20 அணிகளுக்குள் நுழைந்துள்ளன.

நெஸ்லே லங்கா நிறுவனத்தன் மைலோ குழுமமும் யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகங்கள் இணைந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள கால்ப்பந்தாட்ட கழகங்கள் மற்றும் பாடசாலை அணிகளுக்கிடையில் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றை நடத்தி வருகின்றன.

கிளிநொச்சி ௲ யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் இந்தச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் தீவக லீக் அணிகளுக்கிடையிலான போட்டி அம்பிகை நகர் அம்பிகை மற்றும் நாரந்தனை அண்ணா ஆகிய விளையாட்டுக் கழகங்களின் மைதானங்களில் நடைபெற்றன.

முதற் சுற்று ஆட்டங்களில் பருத்தியடைப்பு விளையாட்டுக் கழகம் 02:00 என்ற கோல்கள் கணக்கில் வயலூர் முருகன் அணியையும் தம்பாட்டி காந்தி விளையாட்டுக்கழகம் 4:2 என்ற பனால்ட்டி கோல்கள் மூலம் ஊர்காவற்றுறை அண்ணா விளையாட்டுக் கழகத்தையும் சென்.ஜேம்ஸ் அணி 03:02 என்ற கோல்கள் கணக்கில் ஐங்கரன் விளையாட்டுக் கழகத்தையும் மெலிஞ்சிமுனை இருதயராசா விளையாட்டுக் கழகம் 02:00 என்ற கோல்கள் கணக்கில் காரைநகர் கலாநிதி அணியையும் வென்றன.

வேலணை துறையூர் ஐயனார், அருணோதயா, திருவள்ளுவர், சிறி மகேஸ்வரி, நாரந்தனை அண்ணா, பாரதி, சென்.சேவியர், நயினா அண்ணா, சென்.பிலீப்ஸ், ஈஸ்வரன், வெண்புரவி, புங்குடுதீவு நசரேத் ஆகிய அணிகள் நேரடியாக இரண்டாம் சுற்றிலிருந்து விளையாடுவதற்கு ஏற்கனவே தகுதி பெற்றன.

இரண்டாவது சுற்றில் திருவள்ளுவர் அணி பனால்ட்டி உதையில் 03:02 என்ற கோல்கள் கணக்கில் பருத்தியடைப்பு அணியையும் தம்பாட்டி காந்தி அணி 02:00 என்ற கோல் கணக்கில் சிறி மகேஸ்வரி அணியையும் நாரந்தனை அண்ணா அணி 02:00 என்ற கோல்கள் கணக்கில் பாரதி விளையாட்டுக் கழக அணியையும் நயினை அண்ணா அணி 02:00 என்ற கோல்கள் கணக்கில் சென்.சேவியர் அணியையும் சென்.ஜேம்ஸ் அணி 4:4 என்ற பனால்ட்டி உதையில் சென்.பிலீப்ஸ் அணியையும் மெலிஞ்சிமுனை இருதயராசா அணி 03:01 என்ற கோல்கள் கணக்கில் ஈஸ்ரன் அணியையும் வென்றன.

அருணோதயா அணி வருகை தராமையால் துறையூர் ஐயனார் அணியும் வெண்புரவி அணி வருகை தராமையால் புங்குடுதீவு நசரேத் அணியும் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன.

மூன்றாம் சுற்றில் துறையூர் ஐயனார் அணி 04:00 என்ற கோல்கள் கணக்கில் திருவள்ளுவர் அணியையும் தம்பாட்டி காந்தி அணி 02:00 என்ற கோல் கணக்கில் நாரந்தனை அண்ணா அணியையும் சென்.ஜேம்ஸ் அணி 4:3 என்ற பனால்ட்டி உதையின் மூலம் நயினை அண்ணா அணியையும் மெலிஞ்சிமுனை இருதயராசா அணி 02:00 என்ற கோல் கணக்கில் புங்குடுதீவு நசரேத் அணியும் வென்றன.

நான்காவது சுற்றில் துறையூர் ஐயனார் அணி 03:02 என்ற கோல்கள் கணக்கில் தம்பாட்டி காந்தி அணியையும் மெலிஞ்சிமுனை இருதயராசா அணி 02:00 என்ற கோல்கள் கணக்கில் சென்.ஜேம்ஸ் அணியையும் வென்றன.

இதன் மூலம் துறையூர் ஐயனார் மற்றும் மெலிஞ்சிமுனை இருதயராசா அணிகள் கிளிநொச்சி ௲ யாழ்ப்பாணம் மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் நடைபெறவுள்ள சுப்பர் 20 அணிகளுக்கிடையிலான ஆட்டத்துக்கு தகுதிபெற்றன.

Related posts: