திஸர பெரேராவிற்கு 15% அபராதம்!

இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேராவிற்கு இரண்டாவது ஒருநாள் போட்டியின் ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியின் போது சர்வதேச கிரிக்கட் சபையின் ஒழுக்காற்று சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணியின் இரண்டாவது ஓவரில் டேவிட் வோனர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, திஸர பெரோ நடந்து கொண்ட விடயம் தொடர்பாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனோடு அவுஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டாக்கிற்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது
மிச்சல் ஸ்டாக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கு கரணம், ஓவர் ஒன்று நிறைவடையும் போது ஓட்டங்களை எடுக்க முற்படாமல் இருந்த தினேஸ் சந்திமாலுக்கு எதிராக பந்தை வீசியமை ஆகும். இவை சர்வதேச கிரிக்கட் சபையின் சட்டதிட்டங்களை மீறியுள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
|
|