திரிமன்னவுக்கு உபாதை!

Wednesday, September 11th, 2019

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லாஹிரு திரிமன்னவுக்கு முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த தொடரில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் சிலர் பங்குகொள்ள மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இலங்கை அணியின் ஒரு நாள் அணி தலைவராக லாஹிரு திரிமன்ன நியமிக்கப்பட்டிருந்தர்.

தலைவராக நியமிக்கப்பட்டு சில மணித்தியத்திற்குள் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் தொடரில் விளையாடுள்ள இலங்கை அணி தலைவர் யார் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகவுள்ளது.

Related posts: