தினேஸ் சந்திமலுக்கு ஓய்வு வேண்டும் – தரங்க!

Thursday, February 9th, 2017

 

இலங்கை நட்சத்திர துடுப்பாட்டகாரரான தினேஸ் சந்திமாலுக்கு சில தினங்கள் ஓய்வு தேவை என இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க குறிபிட்டுள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணியின் தற்போதைய அணித்தலைவர் உபுல் தரங்க கூறியதாவது, தினேஸ் சந்திமால் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனைவரும் அறிந்த விடயம். அவருக்கு நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டமையானது மிகவும் கடினமான தீர்மானமாகும்.

ஏனெனில் அணியில் இடம்பிடித்துள்ள அனுபவம் வாய்ந்த வீரர் அவர் மட்டும்தான். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில போட்டிகளில் சிறப்பானதாக அமையவில்லை. இதனால் அவருக்கு சில நாட்களுக்கு ஓய்வளிப்பது சிறந்த விடயம். இதன்மூலம் அவர் தன்னை வலுப்படுத்திக்கொண்டு, அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுப்படுத்துவார் என நம்புவதாக உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

fsdfsd

Related posts: