டோனியுடன் என்ன பிரச்சனை?

Saturday, April 1st, 2017

டோனியுடன் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியின் 10வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இந்த 10 வது சீசனின் ஐபிஎல் தொடருக்கு புனே அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் புனே அணியின் தலைவராக டோனி இருந்தார்.

இந்தநிலையில், டோனி குறித்து ஸ்மித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், டோனி ஒரு சிறந்த வீரர், அவருக்கும் தனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஐபிஎல் 10ஆவது சீசன் தொடங்குவதை முன்னிட்டு புனே அணியின் சீருடை அறிமுகப்படுத்தும் விழா டெல்லியில் நடைபெற்றது.

இதில் ஸ்மித், அஜின்கியே ரஹானே மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: