டோனியின் பெயர் பத்மபூசன் விருதுக்கு பரிந்துரை!

Thursday, September 21st, 2017

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயர் பத்மபூசன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது

இந்தியாவில் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருது இதுவாகும். இந்த விருத்துக்காக டோனியின் பெயர் மாத்திரமே இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அணியின் வெற்றிகரமான தலைவர் என்ற அடிப்படையில் தோனியின் பெயர், பத்மபூசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனி, ஏற்கனவே ராஜிவ் காந்தி கேல் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பத்மபூசன் விருதை பெற்றால், அந்த விருதைப் பெறும் 11 ஆவது இந்திய கிரிக்கட் வீரர் என்ற பெருமைக்கு தோனி சொந்தக்காரராவார். ஏற்கனவே கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் ட்ராவிட் உள்ளிட்ட மேலும் சிலருக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

Related posts: