டு ப்ளசிஸ்க்கு அபராதம்!

Wednesday, November 23rd, 2016

ஹொபர்ட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தென்னாபிரிக்க அணித்தலைவர் டு ப்ளசிஸ், அவரது முழு ஆட்ட ஊதியத்தையும் அபராதமாக செலுத்தும்படி ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் தொடர்ந்து விளையாட ஐசிசி அனுமதியளித்துள்ளது.வாயில் சுயிங்கம் அல்லது மிண்ட் மென்று கொண்டிருக்கும் போது, உமிழ்நீரை பந்தின் மீது தடவி பளபளப்பு ஏற்றியதால் அது பந்தின் இயல்பான நிலையை மாற்றியதாகக் குறிப்பிட்டு ஐசிசி அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

இன்று அடிலெய்டில் நீண்டநேரம் இதுபற்றி டு ப்ளசிஸ்ஸிடம் விசாரணை நடந்துள்ளது. இதன்போது, டு ப்ளசிஸ் செயற்கை பொருளை பந்தின் மீது தடவியது தெரியவந்துள்ளது.
மேலும், கள நடுவர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.

இத்தவறை அவர் முதன்முறையாகச் செய்திருப்பதால், போட்டியிலிருந்து தடை செய்யும் அளவுக்கு இதனை நோக்க முடியாது என்று ஐசிசி கூறியதோடு, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் இதே தவறைச் செய்தால் அவருக்கு ஓரிரு போட்டிகள் தடை விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது. ஆனால், முடிவை எதிர்த்து டு ப்ளசிஸ் மேல்முறையீடு செய்யப்போவதாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

du-plessis

Related posts: