டிவில்லியர்ஸின் ஆட்டம் வீண்: பஞ்சாப்பிடம் மண்டியிட்டது பெங்களூரு!

Tuesday, April 11th, 2017

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தூரில் நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

பெங்களூரு அணியில் கெய்லுக்கு பதிலாக காயத்திலிருந்த மீண்ட அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பினார். நாணய சுழற்சயில் வெனற் பெங்களூரு அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ஓவரல் 4 விக்கெட் இழந்து 68 ஓட்டங்கள் மட்மே எடுத்து திணறியது.

இந்நிலையில், இறுதிகட்டத்தில் டிவில்லியர்ஸின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ஒட்டகள் எடுத்தது பெங்களூரு அணி.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 9 சிக்சர், 3 பவுண்டரி என 89 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.அந்த அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் ஆம்லா 57 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம் பஞ்சாப் அணி விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்வி, 1 வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

Related posts: