ஜோர்ஜ் வெப்ஸ்ரார் வெற்றிக்கிண்ணம் சென்றலைட்ஸ் அணி முன்னிலை!

Thursday, October 20th, 2016

ஜோர்ஜ் வெப்ஸ்டர் வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ்.சென்றல் விளையாட்டுக்கழகம் 7ஆவது ஆண்டாக நடத்தும் யாழ்.நகரில் சிறந்த கழக அணித்தெரிவு நிகழ்வில் 01.01.2016 தொடக்கம் 31.08.2016 வரை நடைபெற்ற 145 போட்டிகளுக்கு வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் சென்றலைட்ஸ் அணி 19 போட்டிகளில் பங்குபற்றி 16 போட்டிகளில் வெற்றி பெற்று 125.75 புள்ளிகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

கே.சி.சி.சி அணி 20 போட்டிகளில் பங்குபற்றி 15 போட்டிகளில் வெற்றி பெற்று 119.24 புள்ளிகளை பெற்று 2ஆம் இடத்திலும் திருநெல்வேலி சி.சி அணி 22 போட்டிகளில் பங்குபற்றி 16 போட்டிகளில் வெற்றி பெற்று 111.17 புள்ளிகளை பெற்று 3ஆம் இடத்திலும் மானிப்பாய் பரீஸ் 4ஆம் இடத்திலும் ஜொலிஸ்ரார் 5ஆம் இடத்திலும் ஜொனியன்ஸ் 6ஆம் இடத்திலும் யாழ்.பல்கலைக் கழக அணி 7ஆம் இடத்திலும் கிறாஸ் கொப்பர்ஸ் 8அம் இடத்திலும் ஓல்கோல்ஸ் 9ஆம் இடத்திலும் சென்றல் 10ஆம் இடத்திலும் உள்ளன.

2010,2011ஆம் ஆண்டுகளில் யாழ்.பல்கலைக் கழக அணியும் 2012ஆம் ஆண்டு கே.சி.சி.சி அணியும் 2013ஆம் ஆண்டு யாழ்.ஜொனியன்ஸ் அணியும் 2014,2015ஆம் ஆண்டுகளில் சென்றலைட்ஸ் அணியும் முதலிடத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Untitled-2 copy

Related posts: