ஜெர்மனி கேப்டன் நியுர் மறுப்பு!

Sunday, August 5th, 2018

ஜெர்மன் கால்பந்து அணியில் வீரர் மெஸுட் ஒஸில் மீது இனப்பாகுபாடு காட்டப்படவில்லை என அதன் கேப்டன் மானுவேல் நியுர் கூறியுள்ளார்.

நட்சத்திர வீரரான மெஸுட் ஒஸில் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும் அவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன் துருக்கி அதிபரை சந்தித்துப் பேசினார். இதனால் அவர் மீது ஜெர்மன் கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தன் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக கூறி ஜெர்மன் அணியில் இருந்து விலகினார் ஒஸில். இது கால்பந்து உலகில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் கேப்டன் நியுர் இதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து செயல்படவே முயற்சித்தோம். யார் மீதும் பாகுபாடு காட்டவில்லை. எனினும் ஒஸிலின் இந்த கருத்தால் அணி வீரர்கள் மத்தியில் மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது. இது ஆட்டத்திறனை பாதிக்கும்.

அணியில் இருந்து விலகுவது என ஒஸில் எடுத்த முடிவுக்கு காரணங்கள் இருக்கலாம். இதை நாங்கள் ஏற்கிறோம் என்றார்.

Related posts: