ஜெயசூர்யாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

Thursday, July 6th, 2017

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரான முன்னாள் வீரர் ஜெயசூர்யா மேலும் 6 மாதங்கள் பதவி வகிப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் யூன் 30ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், பதவிக்காலம் இந்தாண்டு டிசம்பர் 31ம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் சமீபத்திய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், புதிய தேர்வுக்குழு அமைக்கப்படும் என்று இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயசேகரா கூறியிருந்தார். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக்குழுவே தொடர கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. தேர்வுக்குழுவில் ரமேஷ் கலுவித்தரனா, குருசிங்கா, மதுரசிங்கா மற்றும் உபசாந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related posts: