செஸ் சாம்பியனை திணறடித்த சிறுவன்!

Thursday, November 15th, 2018

முன்னாள் உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை 14 வயது சிறுவன் சமனில் பூட்டிய சம்பவம் வெளியாகியுள்ளது.

கேரளாவின் திரிச்சூர் பகுதியை சேர்ந்த 14 வயது நிஹால் சரின் என்ற சிறுவனே முன்னாள் உலக செஸ் சாம்பியன் ஆனந்தை திக்குமுக்காட வைத்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய விரைவு சேஸ் போட்டிகளின் 8-வது சுற்றில் ஆனந்துடன் நிஹால் சமனில் பூட்டியுள்ளார்.

மட்டுமின்றி செஸ் தொடர்பில் பல்வேறு சூட்சுமங்களையும் ஆனந்த் கற்றுத்தந்ததாக நிஹால் தெரிவித்துள்ளார்.

இளையோருக்கான உலக செஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ள நிஹால், 14 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் நிலை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: