சிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணியின் விஜயத்திற்கு புளு மவுண்டன் – அச்சீலியோன் பிரதான அனுசரணை!

Friday, October 28th, 2016

சிம்பாப்வேயில் நடைபெறவிருக்கும் மூன்று நாடுகளுக்கிடையிலான போட்டிக்கான பிரதான அனுசரணையை வீடு மனை விற்பனை ஜாம்பவான்களான புளு மவுண்டன் அச்சீலியோன் தம்வசப்படுத்தியுள்ளது.

ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்கை அணி தற்பொழுது சிம்பாப்வேயில் உள்ளது. நாளை 29ம் திகதி ஹராரேயில் முதலாவது டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியின் முடிவில் இரண்டாவது போட்டி நவம்பர் மாதம் 06ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை நடைபெறும் அதன் பின் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரு நாடுகளுடன் இணைந்து நவம்பர் மாதம் 14ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை இடம்பெறும்.

இலங்கை அணி சிம்பாப்வே விஜயத்திற்கான வெற்றிக் கிண்ணத்திற்கான பிரதான அனுசரணையை பெற்றுக் கொண்டதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம். எமது நாட்டின் உயிர் நாடியான கிரிக்கட் விளையாட்டு எம்மை தொடர்புப்படுத்திக் கொள்வதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

தற்போதைய இளம் இலங்கை அணி எதிர்காலத்தை நோக்கி தம்மை பலப்படுத்திக் கொள்ளும். இத் தருணத்தில் அணியிற்கு எம்மால் முடிந்த உறுதுணையினை அளிப்பது எமக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுகின்றேன்.

எமது அணியில் தற்போதுள்ள திறந் மிக்க இளம் வீரர்கள் அண்மைக் காலத்தில் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற போட்டிகளில் இருந்து பெற்றுக் கொண்ட அனுபவத்தினைக் கொண்டு தமது திறன்களை வெளிக்காட்டுவதுடன் தம்மையும் வளர்த்துக் கொள்ளுவார்கள் என நம்புகின்றேன்.

எமது நாட்டின் இளம் அணி உலக அரங்கத்தில் தமது பெயரை நிலைநாட்டுவதற்கு முயற்சி செய்வதைப் போலவே புளு மவுண்டன் அச்சீலியோன் இனரான நாம் பூகோளத்தின் ஜாம்பவான்களான சிங்கப்பூரின் பால்மர் அன்ட் டர்னர் குழுமத்துட்ன இணைந்து 7 நட்சத்திர வீடு மனைகளை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அச்சீலியோன் இனரான நாம் தற்பொழுது மிகச் சிறந்த சொகுசு வீடு மனைகள் விருதுடன் சேர்த்து மூன்று விருதுகளை ஆசிய பசுபிக் உடமை விருதுகள் 2016/2017ல் வென்றுள்ளோம். சர்வதேச கிரிக்கெட் உடனான எமது உறவு எமக்கு நன்மைகரமானதாக அமையும் என குழு பணிப்பாளர் வைத்தியர் ஹிரான் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

வீடு மனைத்துறையின் முன்னோடிகளான புளு மவுண்டன் அனைத்து வீடு மனை தொடர்பான விடயங்களுக்கும் ஒரே தீர்வாக திகழ்வதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டு வருகின்றது. தாம் வழங்கும் தீர்வுகளாக சிறந்த செலவுத் திட்டங்கள், சிறந்த முதலீடுகள், நீண்டகால முதலீடுகள், பெருமிதம் மிக்க உரிமைகள், பணத்திற்கான பெறுமதி, பிரச்சினைகள் அற்ற காணி ஒப்பந்தங்கள் மற்றும் உடனடி தீர்வுகள் இவற்றுள் அடங்குகின்றன. உலகின் மிகச் சிறந்த 1000 வீடு மனைத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக தம்மை உயர்த்தி இப்பட்டியலில் இடம்பெற்ற இலங்கையின் ஒரே நிறுவனமாக திகழ்கின்றது. ஆசிய பசுபிக் உடமை விருதுகளில் புளு மவுண்டன் 5 நட்சத்திர விருதொன்றினையும் வென்றது.

2b995059806374abcad77ea74086c32d_L

Related posts: